திமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு..174 இடங்களில் திமுக போட்டியிடுகிறது

india election dmk aiadmk
By Jon Mar 09, 2021 07:21 PM GMT
Report

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி உள்பட மொத்தம் 187 தொகுதிகளில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

திமுக கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு உதயசூரியன் சின்னத்தில் 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்ப்ட்டு உள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 187 தொகுதிகளில் திமுக கூட்டணி போட்டியிடுவதாக இறுதி செய்யப்பட்டுள்ளது.