ஆடு பகை குட்டி உறவா? மாவட்டச் செயலாளர்களுக்கு கடிவாளாம் போடும் ஸ்டாலின்!

politics admk tamilnadu
By Jon Feb 18, 2021 12:11 PM GMT
Report

திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அதிமுக அரசினை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் மாவட்டச் செயலாளர்களோ அதிமுக அமைச்சர்களிடம் நட்பு பாராட்டி வருவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடும் அதிர்ச்சினையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை திமுக, அதிமுக கட்சி தலைமை நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டால் பரஸ்பரம் வணக்கம் கூறுதல் , நலம் விசாரித்தல் இப்படித்தான் இருந்தனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் திமுக மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் நட்பு பாராட்டி

ஆடு பகை குட்டி உறவா? மாவட்டச் செயலாளர்களுக்கு கடிவாளாம் போடும் ஸ்டாலின்! | Dmk Stalin District Enemy

இன்னமும் சொல்லப்போனால் டெண்டர்கள், பார் ஏலம், ஏரியில் மீன் குஞ்சு வளர்ப்பதற்கான டெண்டர் என ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து பணம் சம்பாதித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் அண்ணா அறிவாலயத்தின் காதுகளை எட்டிய போதிலும் பணம் சம்பாதிக்கத்தானே, பிழைக்கட்டும் என தலைமை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டது.

ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆடும் பகை குட்டி உறவு என இருந்தால் அது வாகு வங்கியினை பாதிக்கும் ஆகவே கட்சி நிபந்தனைக்கு உட்பட்டு தொண்டர்கள் மாவட்ட செயலாளர்கள் பணியாற்ற வேண்டும் என திமுக தலமை கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிகை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இதற்கெல்லாம் முடிவுகட்ட மாவட்ட செயலாளர்களுக்கு நெருக்கமான அமைச்சர்கள், எம்எல்ஏக்களை எதிர்த்து திமுக மாவட்டச் செயலாளர்களை நிறுத்துவது என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அமைச்சரை எதிர்த்து அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளது மாவட்ட செயலாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.