திராவிட இயக்க பேச்சாளர் நெடுஞ்செழியன் காலமானார்
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த திராவிட இயக்க பேச்சாளர் நெடுஞ்செழியன் காலமானார்.
நெடுஞ்செழியன் காலமானார்
தமிழறிஞரும் திராவிட இயக்க பேச்சாளருமான நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார், இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அமைச்சர் இரங்கல்
ஆனால் சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன்சிகிச்சை பலனின்றி இன்று அதி காலை உயிரிழந்தார், அவரது உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமனியன் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில் நெடுஞ்செழியனின் உடல் இறுதி சடங்கிற்காக சொந்த ஊரான திருச்சிக்கு எடுத்து செல்லப்படுகிறது.
நெடுஞ் செழியனின்மரணம் திமுகவினருக்கும் கழகத்தொண்டர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.