சிகரெட் கொடுக்க தாமதம்...கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர்

dmk thanjavur dmk attack
By Petchi Avudaiappan Sep 13, 2021 07:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

 தஞ்சையில் திமகவினர் சிகரெட் கொடுக்க தாமதம் கடையை அடித்து நொறுக்கிய திமுகவினர் அடித்து நொறுக்கிய சம்வம் அரங்கேறியுள்ளது.

தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவர் மன்னார்குடி - பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கரி கடையும், டீக்கடையும் நடத்தி வருகிறார். இங்கு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பிருந்தா நகரை சேர்ந்த மன்னார்குடி திமுக நான்காவது வட்டப் பிரதிநிதி. பாண்டவர் , அவரது நண்பர்கள் மன்னார்குடி திமுக நகர இளைஞரணி அமைப்பாளர், முருகேசன், மற்றும் மன்னார்குடியை சேர்ந்த திமுக நிர்வாகிகளான சுரேஷ் பிரபு, இசையரசன் ஆகியோர் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற கறி விருந்துக்கு சென்று விட்டு சூரக்கோட்டையில் உள்ள ஒரு ஆற்றில் குளித்து விட்டு மன்னார்குடி பிரிவு சாலையில் உள்ள பேக்கரியில் உள்ள பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டுள்ளனர்.

அப்போது கடையில் இருந்த பெண் சிகரெட் கொடுக்க காலதாமதம் செய்ததால் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி அந்தப் பெண்ணின் உடையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடை ஊழியர்களுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த 6 பேரும் அங்குள்ள சேர், டீ பாய்லர் ஸ்டாண்டு, இரு சக்கர வாகனம் மற்றும் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். தகவலறிந்து வந்த கடையின் முதலாளி ஆனந்தன் சூரக்கோட்டையில் உள்ள ஆட்களுடன் கடைக்கு வந்துள்ளார். அவர்களை கண்டதும் தகராறில் ஈடுபட்ட ஆறு நபர்களும் அங்கிருந்து காரில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது அவர்களை சுற்றி வளைத்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரின் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.