தவெகவிற்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் - திமுக கடும் எதிர்ப்பு

Indian National Congress DMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 06, 2026 06:03 AM GMT
Report

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவளிக்க உள்ள நிலையில், திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தவெகவிற்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 

தவெகவிற்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் - திமுக கடும் எதிர்ப்பு | Dmk Slams Congress For Support Tvk

இதனையடுத்து, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகளிடம் தவெக தரப்பில் இருந்து ஆதரவு கோரப்பட்டுள்ளது.

தவெகவிற்கு ஆதரவு வழங்குவது குறித்து மக்களின் நலனுக்கேற்ப முடிவெடுக்க மாநில தலைமைக்கு அதிகாரம் வழங்குவதாக என காங்கிரஸ் தேசிய தலைமை அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தவெகவிற்கு ஆதரவு வழங்க காங்கிரஸ் மாநில தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தவெகவிற்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் - திமுக கடும் எதிர்ப்பு | Dmk Slams Congress For Support Tvk

"திமுக, காங்கிரஸ் கூட்டணி 2026 தேர்தலுக்கான கூட்டணி. தேர்தல் முடிந்து விட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் க்ரிஷ் சோடங்கர் அறிவிப்பார்" என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இன்று விஜய்யை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க க்ரிஷ் சோடங்கர் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தவெகவிற்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் - திமுக கடும் எதிர்ப்பு | Dmk Slams Congress For Support Tvk

இந்நிலையில், காங்கிரஸ் தமிழக மக்களின் முதுகில் குத்தியுள்ளது என திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் விமர்சித்துள்ளார்.

திமுக எதிர்ப்பு

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க முடிவெடுத்துள்ளது. இது திமுகவின் முதுகில் குத்தவில்லை, வாக்களித்த தமிழக மக்களின் முதுகில் குத்தியுள்ளனர். எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என தெரியவில்லை. 

தவெகவிற்கு ஆதரவளிக்கும் காங்கிரஸ் - திமுக கடும் எதிர்ப்பு | Dmk Slams Congress For Support Tvk

இது காங்கிரஸ் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவா? காங்கிரஸ் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தால் அவர்களே அறிவித்திருக்கலாமே? இப்படி தான் எல்லா முடிவையும் எடுக்கிறார்களா?

இந்த முடிவு எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? அடுத்து வரும் உத்திரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் ஒரு நம்பகமற்ற கூட்டணியாக உள்ளது. அகிலேஷ் யாதவ் எப்படி காங்கிரஸை நம்பி களத்தில் நிற்பார்? இதனை சொல்ல காங்கிரஸ் தேசிய தலைமை அச்சப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.