காவல்துறை விவகாரங்களில் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை – திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் கடும் விமர்சனம்

Vijay Tamil nadu DMK Aadhav Arjuna TVK
By Vinoja Jun 19, 2026 04:11 PM GMT
Report

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கு எதிரான அரசினர் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

சட்டமன்றக் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க முடியாததால் நேரலை தவிர்க்கப்பட்டதாக சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார்.

காவல்துறை விவகாரங்களில் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை – திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் கடும் விமர்சனம் | Dmk Sivasankar Allegation On Cm Vijay

மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதலமைச்சர் இதுகுறித்து பதிலளிக்கவில்லை என விமர்சித்தார்.

காவல்துறைக்கு பொறுப்பான முதலமைச்சர் பதில் அளிக்காமல், காவல்துறையின் ‘நிழல் அமைச்சர்போல்’ ஆதவ் அர்ஜுனா செயல்படுகிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

காவல்துறை விவகாரங்களில் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை – திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர் கடும் விமர்சனம் | Dmk Sivasankar Allegation On Cm Vijay

இவ்விவகாரங்களுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை எனவும் தெரிவித்தார்.