இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் தயாராக வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
M K Stalin
DMK
By Irumporai
இந்தியாவை காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக இருக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன்பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் இந்தியாவைக் காப்பாற்ற திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும்.

நாட்டை காப்பாற்ற
நாட்டை காப்பாற்ற தேர்தலுக்கான பணிகளை விரைந்து செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்றாக வேண்டும். மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்காமல் இருந்தாலும் சிறந்த மாநிலமாக வளர்ந்துள்ளோம் என கூறினார்.