காங்கிரசுக்கு இன்றே கடைசி நாள்.., கெடு விதித்துள்ள திமுக
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை இன்று இறுதி செய்ய கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த முறை கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
ஆனால், வரும் தேர்தலிலும் 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஒரு மாநிலங்களவை சீட்டையும் வழங்க திமுக தலைமை தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், இதற்கு மேல் தொகுதிகள் வழங்க முடியாது என திமுக தரப்பு தெரிவித்துள்ளது.
35 தொகுதிகள் கிடைக்காவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்தும் காங்கிரஸ் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.