திமுக பொதுச் செயலாளர் துரை முருகன், மகன் கதிர் ஆனந்த் வாக்களிப்பு

dmk vote kathir Durai Murugan
By Jon Apr 06, 2021 02:18 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் இன்று தன்னுடைய மகனும் எம்.பியுமான கதிர் ஆனந்த் உடன் வந்து வாக்களித்தார்.   

திமுக பொதுச் செயலாளர் துரை முருகன், மகன் கதிர் ஆனந்த் வாக்களிப்பு | Dmk Secretary Durai Murugan Son Kathir Anand Vote

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "எனக்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் திமுக வெற்றி பிரகாசமாக உள்ளது" என கூறினார்.