தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? தொல்.திருமாவளவன்

Thol. Thirumavalavan
By Fathima Mar 02, 2026 11:20 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இன்றைய தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கில் வென்றுள்ளதால் தங்களது கட்சிக்கான செல்வாக்கும் அதிகரித்துள்ளதால் 2026 தேர்தலில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது 12 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு விசிக கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? தொல்.திருமாவளவன் | Dmk Seat Sharing Talk With Vck What Happened

இந்நிலையில் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 2021ம் ஆண்டில் நிலவிய சூழலே தற்போது வரை நிலவி வருகிறது, திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும். திமுக-விடம் பேரம் பேசும் கட்சியல்ல விசிக, தொகுதிப் பகிர்வே அதிகாரப்பகிர்வு தான்.

ஆட்சியில் பங்கு கேட்கும் சூழல் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை, எண்ணிக்கை முடிவான பின்னரே தொகுதிகளின் நிலவரம் குறித்து முழுமையாக தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் பயணிக்கும் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? தொல்.திருமாவளவன் | Dmk Seat Sharing Talk With Vck What Happened