வெற்றி பெற்ற 18 தொகுதிகளில் 16ஐ திரும்பப் பெற்றுள்ளோம்- செல்வபெருந்தகை

Indian National Congress DMK
By Fathima Mar 27, 2026 10:48 AM GMT
Report

இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான செல்வபெருந்தகை, தென்காசி, விருத்தாச்சலம் தவிர கடந்த தேர்தலில் வென்ற 16 தொகுதிகளை மீண்டும் நாங்கள் திரும்ப பெற்று இருக்கிறோம்.

 28 தொகுதிகளில் 23 இடங்களை அடையாளம் கண்டு இருக்கிறோம். ஐந்து தொகுதிகள் மீண்டும் அமர்ந்து பேசி, முடிவு எடுக்க உள்ளோம். கன்னியாகுமரியில் நாங்கள் மூன்று இடங்களில் போட்டியிடுகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தோழமை கட்சிகள் கேட்டு கொண்ட காரணத்தினால் ஏற்கனவே வென்ற இரண்டு தொகுதிகளை அவர்களால் கொடுக்க முடியவில்லை, அதற்கான காரணங்களை நாங்கள் ஒப்புக்கொண்டு இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சிகள் சிலபேரை நிறுத்தும் காரணத்தால், இரண்டு தொகுதிகளை அவர்களால் கொடுக்க இயலவில்லை. அதற்கான காரணங்களை நாம் ஒப்புக்கொண்டு இருக்கிறோம்.