விசிக'விற்கு 2 , மதிமுகவிற்கு 1- எந்தெந்த தொகுதிகளை அளித்துள்ளது திமுக..?
கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விசிகவிற்கு 2 தொகுதிகளை திமுக அளித்துள்ளது.
விசிக 2
கடந்த முறை திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் அக்கட்சி உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர்.
இம்முறையும் விசக திமுக கூட்டணியிலேயே நீடிக்கிறது. ஆனால், இம்முறை தனி சின்னத்தில் போட்டியிடவும் 4 தொகுதிகளை விசிக கேட்டதாகவும் கூறப்பட்டது. அவ்வாறு கோரிக்கை வைப்பதா நிலையில், தற்போது விசிகவிற்கு 2தொகுதிகளை திமுக வழங்கியுள்ளது.
மதிமுகவிற்கு 1
மீண்டும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் அக்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே போல, மதிமுகாவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையும் இறுதி செய்யப்பட்டுள்ளது.
மதிமுக 2 லோக்சபா மற்றும் 1 ராஜ்யசபா கோரிக்கை வைத்த நிலையில், தற்போது 1 லோக்சபாவும் 1 ராஜ்யசபாவும் வழங்க திமுக ஒப்புக்கொண்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் மதிமுக தலைவர் வைகோவின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஆனால், இன்னும் எந்த தொகுதியில் மதிமுக போட்டியிடும் என்பது உறுதியாகவில்லை.