ஆட்சிக்கு வரும் முன் #GoBackModi அதிகாரத்தில் அமர்ந்ததும் விருந்தாளியா? - ஆவேசமான சீமான்

seeman dmk gobackmodi
By Irumporai Dec 28, 2021 02:29 PM GMT
Report

பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாற்றலாம்’ என, ‘Go Back Modi' தொடர்பாக திமுக கூறிய கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனவரி 12-ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி. மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கிறார், இந்த நிலையில் எப்போதும் பிரதமர் மோடியின் வருகையின் போது திமுக தனது எதிர்ப்பினை பதிவு செய்யும்.

இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறுகையில் எதிர்க்கட்சியாக இருந்தபோது கறுப்புக் கொடி காட்டினோம். தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டதால் அப்படி செய்தோம். இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்துள்ளார்.

இப்போது நாங்கள் தான் அவரை அழைத்திருக்கிறோம். பிறகு எப்படி நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியும். அவரை விருந்தினராக அழைத்திருக்கிறோம். பிரதமர் மோடி எங்களுக்கு எதிரி அல்ல. இந்துத்துவாதான் எதிரி . திமுக தன்மானத்தோடுதான் நடந்துகொள்கிறது” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார்.

ஆர் எஸ் பாரதி கருத்து குறித்து தனது ட்விட்டர் பதிவில் நாம்தமிழர் கட்சி தலைவர் சீமான் கடும் கண்டணம் தெரிவித்துள்ளார் தனது ட்விட்டர் பதிவில்:

பகையாளி என்பது விருந்தாளியானது போல, நாளைக்கு விருந்தாளி கூட்டாளியாகவும் மாறி, மக்களை ஏமாளியாக்கிக் கறுப்புக்கொடியைக் கீழே வீசிய கரங்கள், காவிக்கொடியைக் கையிலேந்தும் நாள் வெகுதொலைவில் இல்லை .

ஆட்சிக்கு வருமுன் #GoBackModi என்றவர்கள் அதிகாரத்தில் அமர்ந்ததும், 'பிரதமர் மோடி வருகையை எதிர்க்கமாட்டோம்; அவர் எங்கள் பகையாளி அல்ல; விருந்தாளி' என்கிறார்கள்.

அம்மையார் மம்தாவுக்கும், ஐயா பினராயி விஜயனுக்கும் பகையாளியாக இருப்பவர், ஐயா ஸ்டாலினுக்கு மட்டும் விருந்தாளி ஆனதெப்படி? என சீமான் தனது ட்வீட்டர் பதிவில் சீமான் கேள்விஎழுப்பியுள்ளார்.