திமுக சிறப்பாக ஆட்சி செய்கிறது தேவையில்லாமல் விமர்சிப்பது வெற்று அரசியல் - நடிகர் எஸ்.வி.சேகர்
கொரோனா தொற்றில் இருந்து மக்களை விடுவிக்க நினைக்கும் திமுகஅரசின் மீது விமர்சனம் வைப்பது வெற்று அரசியல் என எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடிகர் எஸ்.வி சேகர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.வி சேகர் : சிவாஜி கணேசனின் மணிமண்டபம் விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதில், அரசு தேவையானதை செய்யும். அதனை வைத்து புறம் பேசுவது எனக்கு தெரிந்து தேவையில்லாதது என கூறினார்.
மேலும் திமுகவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 100 நாட்கள் ஆகாமல் விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம் இருக்கிறோம். ஏனென்றால் எந்த அரசும் வந்தவுடன் செயல்பாடுகளை ஆரம்பிக்கும்.

இன்று திமுக தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை காத்துள்ளது. கொரோனா காலத்தில் அரசு செயல்பாடுகள் குறித்து விமர்சனம் வைப்பது தேவையற்றது.
நோய்தொற்றில் இருந்து மக்களை விடுவிக்க நினைக்கும் அரசின் மீது விமர்சனம் வைப்பது வெற்று அரசியல் ஆகும் என தெரிவித்துள்ளார்.