தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்:கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று ஐஏஎன்எஸ் மற்றும் சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் தற்போது ஆளும் கட்சிகள் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் புதுச்சேரியில் அதிமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் மாநில பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ஐஏஎன்எஸ் மற்றும் சி-வோட்டர் நிறுவனங்கள் மேற்கண்ட 5 மாநில மக்களின் மனநிலையை அறியும் பொருட்டு கருத்துக் கணிப்பை நடத்தியது.
அதன்படி, மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி, அசாமில் பாஜக கூட்டணி ஆகியன ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்றும்,
தமிழகத்தில் அதிமுக, புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழக்கும் என்றும் தெரிவித்துள்ளது.