ஆட்சியில் அமர்ந்திருப்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல .. முதலமைச்சர் பேச்சு
திமுக முப்பெரும் விழா விருதுநகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார்,அப்பொழுது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் .
தமிழ்நாடு முன்னணி மாநிலம்
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சி குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டால் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது.

உலக சுகாதார அமைப்பானது 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற வீதத்தில் மருத்துவர்கள் உள்ளனர்.
பட்டினி சாவு இல்லாத மாநிலம்
இந்திய அளவிலான தனிநபர் வருமானத்தை விட தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் என்பது அதிகம். மேலும் பட்டினி சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
#LIVE: விருதையில் நடைபெறும் கழக #முப்பெரும்விழா2022-இல் தலைமையுரை https://t.co/0Tw4oevkEM
— M.K.Stalin (@mkstalin) September 15, 2022
மேலும் ,ஆட்சியில் அமர்ந்திருப்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, உடன்பிறப்புகளால் ஆட்சியில் உட்காரவைக்கப்பட்டு இருக்கிறேன் எனக் கூறினார்.இந்தியா முழுவதும் உள்ள 100 தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில் உள்ளது.
இப்படி தமிழ்நாட்டின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம் இதுதான் திராவிட மாடல் வளர்ச்சி,திராவிட மாடல் ஆட்சி என்றும் இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆட்சி செய்யப்போவது திமுகதான் என்று கூறினார்.