கை கொடுப்பது போல் மோதிரத்தை அவிழ்த்து விடுவார்கள் திமுகவினர் - டிடிவி தினகரன்

dmk hand dhinakaran ammk
By Jon Mar 30, 2021 01:24 PM GMT
Report

ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அமமுக கட்சித் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிகவின் பாலச்சந்தர், மதுரை வடக்கு தொகுதியிலும் போட்டியிடும் அமமுகவைச் சேர்ந்த ஜெயபாலன் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய டி.டி.வி.தினகரன் கூறுகையில், ”முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு யாருடனும் கூட்டணி இல்லை பணத்துடன் மட்டுமே கூட்டணி வைத்திருக்கிறார்கள். புரட்சித் தலைவி அம்மாவிற்கு எடப்பாடி பழனிச்சாமி இழைத்த துரோகத்திற்கு தக்க பதிலடி மக்கள் கொடுக்கவேண்டும்.

திமுகவைச் சேர்ந்தவர்கள் கைகூடுப்பதுபோல் கையில் இருக்கும் மோதிரத்தை திருடி விடுவார்கள். பஜ்ஜி கடையில் பாக்சிங் செய்தவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் உடமைகள் சூரையாடப்படும். 1500, 2000 ஆசைப்பட்டால் நாடு நாசமாக போகும்.

   கை கொடுப்பது போல் மோதிரத்தை அவிழ்த்து விடுவார்கள் திமுகவினர் - டிடிவி தினகரன் | Dmk Ring Giving Hand Dhinakaran

ஆடு மாடுவாங்குவது போல் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்க துடிக்கிறார்கள். டேவிட் அண்ணாதுரை அவர்களை வெற்றி பெறச் செய்தால் 69 வகை சாதியினருக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அவர்களுக்கு டிஎன்சி சாதி சான்றிதழ் வழங்கப்படும். திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் கோரிக்கைகளான மல்லிகை வாசனை திரவியம் தொழில்சாலை அமைக்கப்படும்.

அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். இந்த தொகுதியின் மக்களின் கோரிக்கைகளான 3 சுங்கச்சாவடிகள் அகற்றப்படும். வடபழஞ்சியில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மாற்றியமைக்கப்படும் வாக்குறுதிகளை அளித்தார்.

மேலும் நாவுக்கரசர், முன்னாள் அமைச்சர், சபாநாயகர் காளிமுத்து அவர்களின் மகன் டேவிட் அண்ணாதுரை நினைத்திருந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம் ஆனால் அவர் அவருடைய தந்தை போன்றவர் நேர்மையின் வழி நிற்பவர்” என்றார்.