திமுக அறிக்கை காலி பெருங்காய டப்பா-கிண்டல் செய்த அமைச்சர்

minister report dmk aiadmk
By Jon Mar 14, 2021 02:29 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ள நிலையில் அதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பங்கீட்டை முடித்து அடுத்தக்கட்டமாக அறிக்கைகளை தயார் செய்து வருகின்றன.

இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியானது. அதில் பெண்கள் வேலைவாய்ப்பு, பெட்ரோல் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள எஸ்.பி.வேலுமணி தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலைதான் வீசுகிறது.

இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவரே வென்று முதல்வராக பதவி ஏற்பார். திமுக சாத்தியமில்லாத பொய்யான அறிக்கைகளை மக்களுக்கு வழங்குகிறது. அது வெறும் காலி பெருங்காய டப்பா. மேலும், அறிக்கை விட்டே பழக்கப்பட்டவர் திமுக தலைவர் ஸ்டாலின் என விமர்சனம் செய்தார். உண்மையான தேர்தல் அறிக்கையை அதிமுக விரைவில் வெளியிடும் என தெரிவித்துள்ளார்.