’வென்றே தீருவோம்’ புதிய தேர்தல் பிரச்சார விளம்பரத்தை வெளியிட்ட திமுக

election advertisement dmk win
By Jon Mar 29, 2021 04:59 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் முழு வீச்சில் நடைபெறுகிறது. தேசிய கட்சி தலைவர்களும் தமிழகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். நேற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வந்திருந்த நிலையில் நாளை பிரதமர் மோடி வர இருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைய புதிய பிரச்சார வீடியோக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக ஸ்டாலின் தான் வராரு என்பதை பிரதான தேர்தல் பிரச்சார பாடலாக பயன்படுத்தி வந்தது. இந்நிலையில் இன்று ‘வென்றே தீருவோம்’ என்கிற புதிய பிரச்சார பாடலை வெளியிட்டுள்ளது.