திமுக கூட்டணிக்குள் நிச்சயமாக பிளவு ஏற்படும்: அமைச்சர் செல்லூர் கே.ராஜு கணிப்பு
திமுக கூட்டணிக்குள் நிச்சயமாக பிளவு ஏற்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். இதுபற்றி அமைச்சர் செல்லூர் கே.ராஜு மேலும் கூறுகையில் "127 நிறுவனங்கள் பங்கேற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் ஏராளமானோருக்கு வேலைக்கான ஆனை வழங்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில்தான் பொதுத்துறைகள் அனைத்தும் தனியார் மயமானது. ஸ்டாலின் அனைத்தையும் மறந்து விடுகிறார். அவருக்கு ஞாபகமறதி நோய் என நினைக்கிறேன். ஸ்டாலினுக்கு பதவி வெறி பிடித்து உள்ளதால் அரசை குற்றஞ்சாட்டி பேசி வருகிறார்.
தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்வதால் எந்தவொரு தாக்கமும் ஏற்படாது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களை மக்கள் மறக்க மாட்டார்கள். திமுக - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் மக்கள் விரோதத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
வேதா இல்லம் திறப்பு குறித்து முதல்வர் உரிய அறிவிப்பு வழங்குவார். திமுக கூட்டணிக்குள் பிரச்சினை வந்துவிட்டது. விரைவில் திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்ப்படும். தூக்கு மேடைக்கு போன 7 தமிழர்களைக் காத்தவர் ஜெயலலிதா. 7 தமிழர்கள் விடுதலை என்பது சர்வதேசப் பிரச்சினையாக உள்ளது.
7 தமிழர்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்" எனக் கூறினார்.