முன்னாள் அமைச்சர்களை பழிவாங்க வேண்டாம் - அதிமுக!
அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறி வைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதாக வரும் செய்திகள், மக்கள் நலப்பணிகளில் முழு கவனம் செலுத்தாமல், திமுக அரசு கழகத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறாதோ என்ற ஐயப்பாடும், வருத்தமும் மனதில் எழுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும்
பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும்
சந்திக்க, கழகம் எப்பொழுதும் தயாராகவே உள்ளது.
ஆனால், ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும்
முன்னரே ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது எனவும்
தெரிவித்துள்ளனர்.