எட்டுவழிச் சாலை ரத்து, அதானி துறைமுகம் எதிர்ப்பு: திமுகவின் 4 புதிய வாக்குறுதிகள்
தேர்தலின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். எரிவாயு சிலிண்டருக்கு மானியம், நீட் தேர்வு ரத்து, தமிழ் கட்டாயம், உதவித் தொகை உயர்வு, தமிழர்களுக்கு முன்னுரிமை, ஆவின் பால் விலை குறைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட 500 வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றிருந்தது.
திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை பிற அரசியல் கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் 4 வாக்குறுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. திமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 4 வாக்குறுதிகள் 1.இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 சட்டம் ரத்து செய்யும் வரை முழுமையான அழுத்தம் கொடுக்கப்படும்
2.சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படாது, 3.காட்டுப்பள்ளி துறைமுகம் அமைக்க அனுமதி அளிக்கப்படாது 4.சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை உறுதியாக நிராகரிக்கப்படும்
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.கழகத்தின் அறிக்கையில் சில திருத்தங்கள்!
— M.K.Stalin (@mkstalin) March 14, 2021
பத்திரிகை, ஊடக நண்பர்கள் அவற்றைக் கவனத்தில் கொண்டு செய்திகளில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்! pic.twitter.com/3fVpnLobvc