”பிரதமர் மோடி தமிழகம் வருவது திமுகவிற்கு நல்லது தான்” - ஸ்டாலின் சொன்னது என்ன?
ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான் என ஓ.பி.எஸ். கூறியிருப்பது உலக மகா நடிப்பு என்று தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்து விட்டது. இதனையடுத்து, அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளுக்குள் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இதனையடுத்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வந்து விட்டு போனால் திமுகவிற்கு நல்லதுதான். மோடி பரப்புரைக்கு வந்து சென்றால் தேர்தலில் என்ன முடிவு கிடைக்கும் என அனைவருக்கும் தெரிந்து விடும்.

ஜல்லிக்கட்டு நாயகன் மோடியும் அல்ல; ஓபிஎஸும் அல்ல; அதற்காக போராடிய இளைஞர்கள்தான். ஜல்லிக்கட்டு நாயகன் பிரதமர் மோடி தான் என ஓபிஎஸ் கூறியது உலக மகா நடிப்பு.
விடாக்கண்டன் ஓ.பி.எஸ், கொடாக்கண்டன் ஈ.பி.எஸ். எடப்பாடி முதல்வர் வேட்பாளர் என அறிவித்த ஓ.பி.எஸ். ரொம்ப புத்திசாலிதான். வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறது அதிமுக. அதற்காக நாடகமும் நடத்தி வருகிறது” என்று பேசினார்.