ஆளுநரை மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன் : மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
தமிழக ஆளுநரை வரும் 27ஆம் தேதிக்குள் மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன் என திமுக நிர்வாகி ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆளுநர் ரவி
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதில் இருந்து திமுகவுக்கும் ஆளுநருக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது . இந்த நிலையில் மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர் மிரட்டல் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
போஸ்டரால் பரபரப்பு
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர அரும்பாடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறார்.
ஆகவே, ஒன்றிய அரசே உடனடியாக தமிழகத்தில் இருந்து வரும் 27ம் தேதிக்குள் ஆளுநரை மாற்ற வேண்டும். மாற்றாவிட்டாடல் மறுநாள் 28ம் தேதி மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலை முன் தீக்குளிப்பேன் என்று தெரிவித்துள்ளார். திமுக நிர்வாகியின் இந்த போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.