புத்தகம் மற்றும் நிதி வழங்குங்கள் - தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
request
udayanidhi
mla
By Anupriyamkumaresan
நான் கலந்து கொள்ளும் கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு, பொன்னாடைக்கு பதிலான அங்கு அனைவருக்கும் புத்தகங்களை தாருங்கள் என திமுக எம்.எல்.ஏ. உதயநிதிஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் கலந்து கொள்ளும் கழக நிகழ்ச்சிகளில் பட்டாசு, பொன்னாடை, பூங்கொத்து, ஃபிளெக்ஸ் பேனர்கள் வைப்பதை தவிர்த்து அங்கு அனைவருக்கும் புத்தகங்களை தாருங்கள் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த பெருந்தொற்று நேரத்தில் கல்வி, மருத்துவ உதவிகளை வழங்க தி.மு.க இளைஞர் அணி அறக்கட்டளைக்கு இயன்ற நிதியை வழங்குங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.