திமுக தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதை தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. எப்படியும் இறுதி முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இரவு 12 மணியாகும் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் தற்போது வரை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 138 தொகுதிகளிலும், அதிமுக 97 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அதனால் உற்சாகம் அடைந்த திமுக தொண்டர்கள் தேனாம்பேட்டையிலுள்ள கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலத்தில் கூடி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கொண்டாட்டத்தினை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.