பேரூராட்சி நகராட்சி வார்டு கழக தேர்தல் ஏப்ரல் 22 - 28 வரை நடைபெறும் - திமுக தலைமை அறிவிப்பு!

wardelections dmkelections2022 partyannouncement april22-28
By Swetha Subash Apr 15, 2022 12:54 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

திமுக பேரூராட்சி நகராட்சி வார்டு கழக தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28, வரை நடைபெறும் என அறிவிப்பு. திமுக 15வது பொதுத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பேரூராட்சி மற்றும் நகராட்சி கழக வார்டுகளுக்கு தேர்தல் ஏப்ரல் 22 முதல் 28 வரை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

பேரூராட்சி நகராட்சி வார்டு கழக தேர்தல் ஏப்ரல் 22 - 28 வரை நடைபெறும் - திமுக தலைமை அறிவிப்பு! | Dmk Party Announce Ward Election Dates

சென்னை உட்பட 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கிளை கழக தேர்தல் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 29, 30 மற்றும் மே 1-ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் வேட்புமனு விண்ணப்ப படிவங்களை அந்தந்த மாவட்ட திமுக அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலைமைக் கழக பிரதிநிதிகள் அனுப்பி வைக்கும் ஆணையர்களை கொண்டு திமுக பேரூராட்சி நகராட்சி வார்டு கழக தேர்தல் நடத்தப்படும் என்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தலைமையில் திமுக பேரூர், நகர, மாநகர பிரதிநிதிகள் கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊர்கிளை கழக தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.