போர்க்கொடி தூக்கும் சிவகங்கை திமுகவினர்...கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க மறுப்பு.!

Indian National Congress DMK Karti Chidambaram Sivagangai
By Karthick Jan 29, 2024 08:17 AM GMT
Report

வரும் மக்களவை தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க, சிவகங்கை பகுதி திமுகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

கார்த்தி சிதம்பரம்

கடந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் கார்த்தி சிதம்பரம். வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலிலும், சிவகங்கை தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

dmk-opposes-seat-for-karti-chidambaram

இதற்கு சிவகங்கை திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுகவின் தொகுதி பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் சென்னை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்றது.

திமுகவினர் எதிர்ப்பு

இதில், சிவகங்கை, விருதுநகர் தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று ஆலோசனை நடைபெற்றது. அப்போது கடந்த 20 ஆண்டுகளாக சிவகங்கை மக்களவை தொகுதி, கூட்டணி கட்சிக்கே ஒதுக்கப்படுவதாக அப்பகுதி திமுகவினர் தெரிவித்துள்ளதாகவும், இம்முறை திமுகவே போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பொன்முடியின் தண்டனை - முன்னாள் அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்..!

பொன்முடியின் தண்டனை - முன்னாள் அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்..!

மேலும், சிவகங்கை தொகுதி எம்.பி'யான கார்த்தி சிதம்பரம் திமுகவிற்கு எதிராக கருத்து தெரிவிப்பதாகவும், தொகுதிக்குள் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் சிவகங்கை திமுகவினர் தலைமையிடம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

dmk-opposes-seat-for-karti-chidambaram

ஏற்கனவே, நேற்று கூட்டணியில் திமுகவினர் 21 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியினர் கேட்பதாக கூறப்படும் நிலையில், தற்போது தொகுதிக்குள் திமுகவினர் போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.