திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து - ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கிராம சபைக்கூட்டம் நடத்தி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியின் தோல்விகள் மற்றும் சரிவுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி, ஆட்சி மாற்றத்தை கொண்டு வருமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் வெள்ளோடு ஊராட்சியில், மு.க ஸ்டாலின் கிராம சபைக்கூட்டத்தை நடத்தினார் ஸ்டாலின்.
அப்போது பேசியவர், ‘திமுக ஆட்சி அமைத்தவுடன் முதலில் கல்விக் கடன் அனைத்தும் ரத்து செய்யப்படும். கிராமங்களில் நடக்கும் 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். தினக்கூலி முறையாக மாற்றப்படும்’ என்று கூறினார். மேலும், ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலனுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் பஞ்சு பதுக்கல் தடுக்கப்படும். நெசவாளர் நலனை கருத்தில் கொண்டு ஜவுளித்துறை மேம்படுத்தப்படும்’ என்றும் தெரிவித்தார்.