பொருளாதார நெறுக்கடியில் தவிக்கும் இலங்கை மக்கள் – திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி அறிவிப்பு

Sri Lankan Tamils M K Stalin
By Swetha Subash May 03, 2022 12:15 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

இலங்கை மக்களின் நிவாரணத்திற்காக திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையல், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இலங்கை மக்களுக்கு உதவுவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்நிலையில்,மனிதாபிமான அடிப்படையில்‌, இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள்‌ வழங்கிடுமாறு அன்புடன்‌ கேட்டுக்கொள்கிறேன்‌ என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒருமாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக நிதி உதவி அறிவித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.