தமிழக ஆளுநர் குறித்து விவாதிக்க மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்!
மக்களவையில் தமிழக ஆளுநர் குறித்து விவாதிக்க திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை தாக்கல் செய்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிற்கு எதிராக செயல்படுகிறார்.நீர் தேர்வு ரத்து மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய நிலையில்,அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் திருப்பி அனுப்பினார்.
சட்டசபையில் நீட் தேர்விற்கு எதிராக சட்டசபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
அதனை ஜனதிபதிக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்துகிறார். இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விவாதிக்ககோரி மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் நோட்டீசை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து திமுக எம்.பி.டி.ஆர்.பாலு மக்களவை சபாநாயகரிடம் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீசை தாக்கல் செய்தார்.