எங்கள் சமுதாயத்தை மதிக்காத திமுகவுக்கு பாடம் புகட்டப்படும் - கொந்தளித்த ஹரி நாடார்!

M K Stalin DMK Tirunelveli
By Swetha Mar 27, 2024 06:08 AM GMT
Report

தேர்தலில் போட்டியிட ஒரு நாடார் சமுதாயத்தினர் கூட இல்லை,திமுகவுக்கு பாடம் புகட்டப்படும் என ஹரி நாடார் பேட்டியளித்தார்.

திமுகவுக்கு பாடம்

கடந்த ஆண்டு பனங்காட்டு படை கட்சி சார்பில், ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டார் ஹரி நாடார். வருகின்ற மக்களவை தேர்தலில் இவர் யாருக்கு ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

எங்கள் சமுதாயத்தை மதிக்காத திமுகவுக்கு பாடம் புகட்டப்படும் - கொந்தளித்த ஹரி நாடார்! | Dmk Not Field A Single Nadar Candidate Says Hari

அப்போது,சமூக நீதி சமூக நீதி என்று பேசக்கூடிய திராவிட அரசு, திமுக அரசு இந்த லோக்சபா தேர்தல் 21 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஆனால் இதில் ஒரு வேட்பாளர் கூட நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை நினைக்கும் போது ஒட்டுமொத்த நாடார் சமுதாயமும் உருக்குலைந்து போய் இருக்கிறார்கள்.

தமிழகத்திலேயே 2வது பெரிய சமுதாயமாக இருப்பது நாடார் சமுதாயம் தான். நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒரு வேட்பாளரை கூட நிறுத்தாமல் திமுக புறக்கணித்து இருப்பது மன வேதனையை அளிக்கிறது.

14 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை - மசோதா ஒப்புதல்!

14 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை - மசோதா ஒப்புதல்!

கொந்தளித்த ஹரி நாடார்

ஏற்கனவே ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாடார்கள் பலம் என்ன? நாடார்கள் நினைத்தால் என்ன செய்வார்கள் என்பதை எல்லாம் நாங்கள் நிரூப்பித்து இருக்கிறோம். இதையெல்லாம் அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

எங்கள் சமுதாயத்தை மதிக்காத திமுகவுக்கு பாடம் புகட்டப்படும் - கொந்தளித்த ஹரி நாடார்! | Dmk Not Field A Single Nadar Candidate Says Hari

ஒருவேளை மறந்திருந்தால் அவர்களுக்கு மீண்டும் இந்த தேர்தல் தகுந்த பாடத்தை புகட்டும். இந்த தேர்தல் மட்டுமல்ல, வருகிற தேர்தலில் கூட நாடார்களை சேர்ந்த ஒரு சில இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் கூட சுயலாபத்திற்காக தேர்தல் நேரத்தில் வேறு கட்சிகளுடன் கூட்டணிக்காக சென்று விடுகிறார்கள்.

அவர்களை நம்பி இருக்கின்ற, நாடார் சமுதாயத்திற்கு ஒரு அரசியல் அங்கீகாரம் வந்துவிடாதா என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களின் அனைவரது கனவுகளும் பொய்யாகி கொண்டு இருக்கிறது. இந்த கால சூழ்நிலைகள் எல்லாம் மாறும்.

விரைவில் மாறும். நாடார்கள் கோட்டை என்று சொல்கிற இடங்களையெல்லாம் விரைவில் மீட்டு எடுப்போம். இந்த பணியில் எந்தவித தொய்வில்லாமல் ஹரி நாடார் செயல்படுவார் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.