முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியது..!

M K Stalin DMK
By Thahir Jul 14, 2023 05:45 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.

திமுக எம்.பிக்கள் கூட்டம் 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 ஆம் தேதி ஆரம்பிக்க இருக்கும் நிலையில், முக்கிய விஷயங்களை கேள்விகளாக எழுப்புவது தொடர்பாக திமுக எம்.பி க்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.

DMK MPs meeting under the leadership of M. K. Stalin

தமிழகத்தில் நிலவிவரும் அரசுக்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகள், விலைவாசி உயர்வு, அமலாக்கத்துறையின் சோதனைகள், மணிப்பூர் கலவரம் மற்றும் பொது சிவில் சட்டம் உள்ளிட்டவைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்புவது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.