வரும் 29ம் தேதி திமுக எம்பிகள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு

M K Stalin DMK Chennai Durai Murugan
By Thahir Jan 25, 2023 01:26 AM GMT
Report

வரும் 29ம் தேதி திமுக எம்பிகள் கூட்டம் சென்னையில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக எம்பிக்கள் கூட்டம் 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் 29-01-2023 (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயம் முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெறும்.

வரும் 29ம் தேதி திமுக எம்பிகள் கூட்டம் - துரைமுருகன் அறிவிப்பு | Dmk Mps Meeting On 29Th

அப்போது திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் மத்திய அரசின் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.