‘‘தைரியம் இருந்தா கை வைச்சு பாரு’’ : மாரிதாஸூக்கு சவால் விட்ட திமுக எம்.பி
தமிழக அரசியல் தலைவர்களை அவதூறாக சமூகவலைத்தளங்களில் பேசிய வந்த கிஷோர் கே.சாமி இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு யூடியூபர் மாரிதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்: தி.மு.க நிர்வாகிகள் பேசாத பேச்சா போடாத பதிவா! ஆட்சி நிர்வாகத்தை ஒழுங்கா செய்யத் திறமை இல்லை. கேட்கும் கேள்விகளுக்குப் பதில் இல்லை!
ஆக வழக்கமான அடக்குமுறை அரசியலில் தி.மு.க ஸ்டாலின் அவர்கள் இறங்கியுள்ளார். சட்டத்தை தன் பழிவாங்கும் அரசியலுக்கு வளைக்கும் இந்த ஆட்சியை கலைப்பது தான் சரி எனப் பதிவிட்டுள்ளார்.
மாரிதாஸின் இந்த பதிவுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள திமுக எம்பி செந்தில் குமார்:
தைரியம் இருந்தா கை வைச்சு பாரு... நீங்க எல்லாம் யாரு நீங்க சொல்லிட்டா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிடுவர்களா ?
செம காமெடி. நிறைய வேலை இருக்கு. அவங்க வரும்வரை நேரத்தை பயன் உள்ளதாக செலவழிக்கவும்.

பி கு: உள்ளே போகும் போது மறக்காம போர்டை எடுத்துட்டு போகவும், எனப் பதிவிட்டுள்ளார்.