இந்த கேள்வியை உங்க owner கிட்ட கேட்கணும் : அண்ணாமலையை கலாய்த்த திமுக எம்பி

dmk annamalai aiims Dr.Senthilkumar.S
By Irumporai Sep 09, 2021 12:32 PM GMT
Report

முடிவே பெறாத மெகா சீரியல் போல  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டி முடிக்காது போல,  எனஅரசியல் விமர்சகர்கள் கூறும் அளவிற்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது மதுரை எய்ம்ஸ் விவகாரம்.

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் :

இந்தாண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்கள் சேர்க்கப்படாதது வேதனையாக உள்ளது. வகுப்புகளை விரைவாக தொடங்க மத்திய அரசு கொடுத்த மூன்று வாய்ப்புகளை மாநில அரசு நிராகரித்துவிட்டது.

பல்வேறு மத்திய கல்வி நிறுவனங்கள் ஆரம்ப கட்டத்தில் தற்காலிக வகுப்பறைகளில் தொடங்கியுள்ளன. கட்டுமானம் தொடங்கும் போது, 150 நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை மாணவர்களை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தில் படிக்க மாநில அரசு மறுப்பதற்கு என்ன காரணம்?

ஐஐஎம் திருச்சி கூட புதியதாக இருந்தபோது என்ஐடி திருச்சியில் இருந்து செயல்பட்டது. மத்திய அரசுக்கு எதிரான மனநிலை தமிழ்நாட்டில் தீவிர நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

அண்ணாமலையின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பதிவில் : ஒரு செங்கல் அடியில் 150 மாணவி மாணவர்களை மருத்துவ படிப்பில் அனுமதிப்பது மிக மிக கடினம்.

மதுரைக்கு பின்பு அறிவிக்கப்பட்ட ஜம்மு ஆந்திரா AIIMS மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் பதில் சொல்லமாட்டார்கள். அவங்க ownerயிடம் கேட்க வேண்டிய கேள்வி இங்க வந்து கேட்டுட்டு என்று பதிவிட்டுள்ளார்.