திருச்சி சிவா வீட்டை அடித்து நொறுக்கிய அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் ? துவங்கியதா உட்கட்சி பூசல் ?
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் வீடு மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சிவா வீடு தாக்குதல்
திருச்சி சிவாவின் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அவரது வீடு மற்றும் வீட்டின் முன்பு இருந்த கார் கண்ணாடி ஆகியவற்றின் மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளது.

அமைச்சர் காரணமா
அமைச்சர் கே.என் நேருவின் ஆதாரவாளர்கள் எம்பி சிவா மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகின்றது , திருச்சி சிவா வீட்டின் அருகே புதிய டென்னிஸ் அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை அமைச்சர் நேரு திறந்துவைத்துள்ள நிலையில் திறப்பு விழாவுக்கான கல்வெட்டில் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறவில்லை.
காவல்துறை விசாரணை
இதற்கு சிவா ஆதரவு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகவே இதற்கு பதிலடியாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து சிலரை கைது செய்துள்ள போலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil