8ஆம் தேதி வரை அண்ணாமலைக்கு கெடு : திமுக எம்பி டி.ஆர்.பாலு எச்சரிக்கை
வரும் 8ஆம் தேதி திமுக சார்பில் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என் திமுக எம்பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வீடியோ
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் செய்தியாளர்கள் மத்தியில் திமுக சொத்துப்பட்டியல் என ஒரு விடியோவை வெளியிட்டு இருந்தார். அதில் திமுக அமைச்சர்கள் எம்பிக்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி பதில் கேட்டனர். ஆனால் தான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்கிற நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறார்.
அண்ணாமலை மீது வழக்கு
இந்நிலையில், இது குறித்து பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, திமுகவினர் பற்றிய அவதூறு கருத்துக்களுக்கு பதில் கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இதுவரை வராத காரணத்தால் வரும் 8ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார்.
8 ஆம் தேத்திக்குள் அண்ணாமலை பதில் கூறுவாரா.? அல்லது திமுகவினர் வழக்கு தொடப்போகிறார்களா ? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.