திமுக எம்.பி. மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார் - பரபரப்பு சம்பவம்
திமுக மாநிலங்களவை எம்.பி. என்.ஆர். இளங்கோவின் மகன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோ. இவரது மகன் ராகேஷ் (22). புதுச்சேரியிலிருந்து சென்னை திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, சாலை தடுப்புச் சுவரின் மீது மோதி கார் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான காரில் ராகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் பயணம் செய்துள்ளனர்.
இந்த பயங்கர கார் விபத்தில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் பயணம் செய்த வேதவிகாஷீ படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் வேதவிகாஷீயை மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராகேஷிடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கோட்டகுப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக எம்.பி. இளங்கோ மகன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.