திரிஷாவை தொடர்புபடுத்தி விஜய்யை விமர்சித்த நயினார் - திமுக கண்டனம்
திரிஷாவை தொடர்புபடுத்தி விஜய்யை விமர்சித்த நயினார் நாகேந்திரனுக்கு திமுக மற்றும் தவெக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
திரிஷா வீட்டில் இருந்து..
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெகவின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.

விஜய்யின் இந்த பேச்சு குறித்து செய்தியாளர்கள் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பிய போது, "பாவம் அவர் அனுபவம் இல்லாதவர். வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷா வீட்டில் இருந்து முதலில் வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்கும்" என பதிலளித்தார்.

நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு திமுக மற்றும் தவெக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
தவெக கண்டனம்
இது குறித்து தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.
— Nanjil Sampath (@NanjilPSampath) February 13, 2026
அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள…
அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா?
4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?
முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது" என தெரிவித்துள்ளார்.
திமுக கண்டனம்
மேலும், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல.
இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி, அவதூறாகப் பேசுவது அழகல்ல.
— தமிழச்சி (@ThamizhachiTh) February 14, 2026
பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்.#RespectWomen#CivilPolitics#WomenDignity
பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்" என தெரிவித்துள்ளார்.