கொரோனாவால் முடங்கிய அகதி முகாம் - திமுக எம்.பி செந்தில்குமார் செய்த உதவி
தருமபுரி மாவட்டம் தும்மளஹள்ளி கிராமத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கொரோனோ பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த முகாமை சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதனால், முகாமைச் சேர்ந்த யாரும் வெளியேற முடியாததால், உணவுப் பொருள்கள் இன்றி தவித்தனர். இதுதொடர்பாக, முகாமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தாங்கள் அனுபவித்து வரும் துயரத்தை வீடியோவாக பதிவு செய்து வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்தார்.
அதனை பார்த்த தருமபுரி திமுக எம்.பி மருத்துவர் செந்தில்குமார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இன்று நண்பகலுக்கு முன்பாகவே முகாமைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உணவுப்பொருள்களையும் ஒரு லட்சம் ரூபாய் செலவில் வாங்கி, அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கியுள்ளார்.