ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு - இதுவரை சிக்கியது என்னென்ன தெரியுமா?
ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.16 கோடி சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐடி ரெய்டு
தமிழ்நாட்டில் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், திமுக எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்கள்,
வீடுகள், அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் ஹோட்டல்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு புகாரின்பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
16 கோடி பறிமுதல்
சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்த புகாரின்பேரில் ஏற்கனவே அமலாக்கத்துறை இவருக்கு சொந்தமான 88 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கியது.
மேலும், ஏற்கனவே ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இப்போது மேலும் ரூ.2.5 கோடி சிக்கியுள்ளது. அதேபோல் சவிதா கல்விக்குழுமம் தொடர்புடைய இடங்களிலிருந்து ஏற்கனவே ரூ.10 கோடியும்,
இப்போது கூடுதலாக ரூ.2 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.