விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்க நினைக்கிறதா தவெக அரசு? கனிமொழி கேள்வி
மாநில உரிமைகளை அடகு வைத்துவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்க நினைக்கிறதா தவெக அரசு என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி விவகாரம்
தமிழ்நாட்டிற்கு, 3,500 கன அடி வீதம் 15 நாட்களுக்கு கர்நாடகா நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடகா நீரை திறக்க மறுத்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன.
காவிரி, மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா சென்று, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில், தற்போதைய சூழலில் விஜய் வர வேண்டாம் என டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது எனவும், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விவாதிக்க டி.கே.சிவகுமார் கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் முதல்வர் விஜய் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளனர்.
விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்க நினைக்கிறதா?
விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம்.
மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறதா தவெக அரசு?
எல்லாவற்றிலும் திசைத்திருப்பும் அரசியலைச் செய்துவரும் தவெக அரசு, காவிரி பிரச்சனையைத் திசைத்திருப்ப அடுத்ததாக காவிரி ஆற்றங்கரையில் கூட “ஆய்வு” நடத்தலாம்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 31, 2026
மாநில உரிமைகளை அடகு வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு, விளம்பர மயக்கத்தில் தமிழ்நாட்டை…
டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதோடு, தற்போது பாதி தமிழ்நாட்டிற்கு குடிநீர்ப் பிரச்சினை வருமளவுக்கு காவிரி விவகாரம் சென்றுவிட்டது. தவெக அரசு இனியும் இப்பிரச்சனையில் மௌனம் காக்காமல், உடனடியாக நடவடிக்கை வேண்டும்" என தெரிவித்துள்ளார்.