ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கனிமொழி பங்கேற்பு
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமைக்கான பாத யாத்திரையில் திமுக எம்.பி.கனிமொழி பங்கேற்றுள்ளார்.
ராகுல் பாதயாத்திரை
பாரத் ஜோடோ யாத்ரா என்னும் பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நிறைவு பெற்றுள்ளது.

கனிமொழி பங்கேற்பு
ராகுலின் பாதயாத்திரை வெற்றியடைய பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சில கட்சி தலைவர்கள் இவரது பாதயாத்திரையில் பங்கேற்றும் வருகின்றனர்.
அந்தவகையில் இன்று ராகுல் காந்தியுடன் திமுக எம்பி கனிமொழியும் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளார். மேலும், அரியானா முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஹரியானா மாநிலம் கெர்லி லாலா பகுதியில் இருந்து ராகுல்காந்தி நடைபயணம் தொடங்கிய நிலையில் கடும் பனிக்கு மத்தியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் இந்த நடைபயணத்தில் பங்கேற்றனர்.