குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி : காரணம் என்ன?

Smt M. K. Kanimozhi Kushboo
By Irumporai Oct 28, 2022 09:31 AM GMT
Report

நடிகையும் பாஜக பிரபலமான குஷ்புவிடம் திமுக எம்பி கனிமொழி மன்னிப்பு கேட்டு உள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சை கருத்து

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக பேச்சாளர் சாதிக் என்பவர் பாஜகவில் உள்ள குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ஜெயராம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்,இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் பக்கத்தில் கண்டனம் தெரிவித்த குஷ்பு.

ஆண்கள் பெண்களை தவறாக பேசுவது அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தை காட்டுகிறது அவர்கள் வளர்ந்த மோசமான சூழலை காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். இதுபோன்ற ஆண்கள் தங்களை கலைஞரை பின்பற்றுபவர்கள் என்றும் அழைத்துக் கொள்கிறார்கள்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இதுதான் புதிய திராவிட மாடலா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.  

மன்னிப்பு கேட்ட கனிமொழி

இதற்கு பதில் அளித்துள்ள கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் ஒரு பெண்ணாகவும் ஒரு மனிதனாகவும் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி : காரணம் என்ன? | Dmk Mp Kanimozhi Apology To Kushboo

யார் இதைச் செய்து இருந்தாலும் எந்த கட்சி சேர்ந்தவராக இருந்தாலும் இதை சகித்துக்கொள்ள முடியாது. நான் இதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.