கதறி அழும் அன்புமணி: கிண்டல் செய்த திமுக எம்பி

people vote aiadmk
By Jon Mar 02, 2021 02:31 PM GMT
Report

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு போராட்டத்தினை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பாமக முன்னெடுத்து வருகிறது. கடந்த சிலமாதமாகவே இந்த போராட்டத்தினை தீவிரமாக கையில் எடுத்த பாமக, இட ஒதுக்கீட்டினை அரசு அறிவித்தால்தான் அதிமுகவுடன் கூட்டணி என கூறியது அதன்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

இதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையினை அறிவிப்பதாக கூறி உள்ளார் பாமக தலைவர் ஜி.கே.மணி. இந்த நிலையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைந்து, தனது தந்தை இராமதாசுடன் போனில் தொடர்பு கொண்டு அழுதுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதற்கு அன்புமணிக்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வருகிறது. இதுகுறித்து தர்மபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், கேமரா ஆன் பண்ணிட்டு போய் உட்கார்ந்து பேச ஆரம்பிச்சாரா?இல்ல, வழக்கமாகவே இவரு போன் பேசும் போது ரெகார்டிங் பண்ணுவாங்களா? என்னவோ ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வாங்க.

அதுவும் அந்த கேமரா என்று கமெண்ட் செய்துள்ளார். இவ்வாறு அன்பு மணிக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் அவரது வீடியோவிற்கு வர தொடங்கியுள்ளது .