நூலிழையில் தப்பிய திமுக எம்.பி ஆ.ராசா - பரபரப்பு சம்பவம்
ஆ ராசா எம்பி பேசிக் கொண்டிருந்த போது மின்விளக்குகள் திடீரெனச் சாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆ ராசா எம்பி
மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் திமுகவை சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்பியுமான ஆ ராசா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தொடர்ந்து பட்ஜெட் குறித்து பேசினார்.
பரபரப்பு
அப்போது எதிர்பாராத வகையில் பலத்த காற்று வீசியதில் மேடையின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மின்விளக்குகள் சாய்ந்தது. சட்டென இதைப் பார்த்துச் சுதாரித்துக் கொண்ட ராசா, அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.
அவர் நகர்ந்த அடுத்த நொடியே மைக் மீது அந்த மின்விளக்குகள் விழுந்தது. உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.