ஆளுநரை எதிர்க்காதிங்க - திமுக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!

M K Stalin R. N. Ravi Chennai
By Sumathi Jan 10, 2023 07:06 AM GMT
Report

 ஆளுநரை தாக்கி பேசக் கூடாது என முதலமைச்சர் திமுக எம்எல்ஏக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உறுப்பினர்கள் கூட்டம்

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரபலமானோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநரை எதிர்க்காதிங்க - திமுக எம்எல்ஏக்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்! | Dmk Mlas Meeting At Chennai Anna Arivalayam

அந்த வகையில், தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், அவ்வை நடராஜன், ஓவியர் மற்றும் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலே, காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆகியோரின் மறைவு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு

முக்கிய அறிவுறுத்தல்

சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

அதில், ஆளுநருக்கு எதிராக பேனர்கள், போஸ்டர்கள் வைக்கக்கூடாது. பேரவையில் ஆளுநரை தாக்கி பேசக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.