திமுக எம்எல்ஏ-க்களுக்கு கார் வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின்

Udhayanidhi Stalin
By Fathima Aug 21, 2026 08:10 AM GMT
Report

திமுக-வின் 59 எம்எல்ஏ-க்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார், இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்தன.

உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் 59 பேருக்கும் கார் வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் அவர் பேசுகையில், ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடனில் இருப்பதால் திமுக-வை சேர்ந்த 59 உறுப்பினர்களும் அரசு வாகனத்தை பெற வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம்.

நலிவடைந்தவர்களுக்கு மட்டுமே வாகனம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏ-க்களுக்கு கார் வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின் | Dmk Mlas Do Not Want Government

ஆதவ் அர்ஜுனா

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஏழ்மையாக இருக்கிறார்கள், அனைவரும் சமம் என்ற முறையில் அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவெகவில் ஏற்கனவே கார் இருப்பவர்கள் விண்ணப்பிக்கமாட்டார்கள், கார் என்பது ஆடம்பரம் இல்லை, மக்களை சந்திப்பதற்கான தேவை என தெரிவித்தார்.