மு.க.ஸ்டாலின் குடும்பத்தில் அடுத்ததாக அரசியலுக்கு வரும் பிரபலம்? - தொண்டர்கள் மகிழ்ச்சி
திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி கிருத்திகா குறித்து பேசியது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் சர்வதேச கழிப்பறை திருவிழா 2022 நடைபெற்று வருகிறது. அங்கு இருக்கும் பல்வேறு பள்ளிகளில் இதுதொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், கழிப்பறை திருவிழா - தீர்வுக்கான களம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
மேலும் பொது கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருத்தல், பொது இடங்களில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசும் வகையில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கக்கூஸ் என்ற செயலியை உதயநிதி ஸ்டாலின் சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.
பின் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் தன் மனைவி கிருத்திகா சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தன்னை விட சேப்பாக்கம் தொகுதியில் அவர்தான் அதிகம் சுற்றிக்கொண்டு இருக்கிறார். இதனால் எனக்கு ஒரு சின்ன பயமும் இருக்கிறது. அடுத்த தேர்தலில் நான் தொகுதி மாற வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறது என உதயநிதி கூறியுள்ளார்.
அந்த அளவிற்கு சிறப்பாக பணிகளை செய்து வருகிறது. தொகுதியில் என்னை விட சிறப்பாக கிருத்திகா தான் செயல்படுகிறார். நான் இப்படி பேசுகிறேன் என்றதும், அவர் என்னை கீழே இருந்து பார்த்து முறைத்துக்கொண்டு இருக்கிறார் எனவும் உதயநிதி கிண்டலாக குறிப்பிட்டார். இதனால் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் என உதயநிதி கூறியுள்ளார்.
அதேசமயம் கிருத்திகா அரசியலில் களமிறங்குகிறாரா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கிருத்திகா உதயநிதி இதுவரை அரசியல் தொடர்பாக பேசியது இல்லை போதியது அவர் தற்போது இயக்குனராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.